Tuesday, January 12, 2010

பொங்கலோ பொங்கல்

" ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்ல" 
                      ஜாதி மதம்  கடந்து ஒரு இனம் கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல்.  ஆடி பட்டம் தேடி விதைச்சு தையிலே அறுவடை முடிச்சு உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கும் ஒரே விழா. உழைக்க தன்வேலையில் தனக்கு உதவி செய்த உயிரினத்துக்கும் தன் நன்றியை தெரிவிக்கும் ஒரே இனம் தமிழினம்.



                       "பொல பொலன்னு விடியயிலே தல குளிச்சு
                            புத்தாட உடுத்திகிட்டு புது நெல்ல எடுத்துகிட்டு
                         பொங்க வச்ச பால் பொங்கல பாக்கையில
                              மனசெல்லாம்  மகிழ்ச்சி பொங்கி வரும் "
  
                      "புது அடுப்பு செஞ்சு வச்சு புது பான எடுத்து வச்சு
                          பச்சரிசி அச்சுவெல்லம் கருப்பட்டி சேத்து வச்சு
                       மங்களம் பொங்க பொங்கி வரும் பொங்க
                           பான பாத்து மனசெல்லாம் மகிழ்ச்சியாச்சு !!!"