இன்றைக்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை அறிந்து கொண்ட அளவுக்கு கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை மக்கள் அறிந்து கொள்ளவில்லை. சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை பயணம் (தஞ்சை பயணம் குறித்து வேறொரு பதிவில் சொல்கிறேன் ) மேற்கொண்ட போது கங்கை கொண்ட சோழபுரம் செல்ல நானும் என் நண்பனும் திட்டமிட்டோம்.
அன்று ஆகஸ்ட் 14,2005. திங்களூர், திருவையாறு, சுவாமி மலை என்று சுற்ற ஆரம்பித்து அன்று மதியம் கும்பகோணம் வந்து சேர்ந்தோம். மதிய உணவை கும்பகோணத்தில் முடித்து விட்டு எங்கள் பயணத்தை தொடங்கினோம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு. செல்லும் வழி எல்லாம் சோழ தேசத்தின் அழகு கண்ணை கவர்ந்தது. விரும்பிய இடத்தில் எல்லாம் புகைப்படம் எடுத்து விட்டு , கங்கை கொண்ட சோழபுரம் சென்று சேரும் போது மணி மாலை 4:30 ஆகிவிட்டது.
தஞ்சையிலோ அல்லது மற்ற கோவில்களிலோ இருக்கும் கூட்டமோ அல்லது ஆர்பாட்டமோ இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்த கங்கை கொண்ட சோழபுரம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ராஜேந்திர சோழனின் காலத்தில் பரபரப்புடன் காணப்பட்ட சோழர் தலைநகரம் இன்று எந்தவித ஆர்ப்பட்டமும் இன்றி காணப்பட்டது. இதற்கு அந்த இடம் அமைந்துள்ள புவி அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அருகில் எந்த பெரிய நகரமும் இல்லை. இங்கு வரும் மக்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமே.
கோவிலின் நுழைவாயில்
கை விடப்பட்ட நகரம் போல் காணப்பட்டாலும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் இந்த பகுதியை நன்கு பராமரித்து வருகின்றனர். பிரகதீஸ்வரர் கோவிலில் நுழைந்ததும் தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பது போன்றே ஒரு உணர்வு. ஆனால் தஞ்சை கோவிலில் இருக்கும் அந்த மூன்று நுழைவாயில்கள் இங்கு இல்லை. உள்ள நுழைந்ததும் பச்சைபசேல் என பராமரிக்கபடும் கோவிலின் சுற்றுபுறம் கண்ணை கவர்கிறது.
கோவிலின் சுற்றுப்புறம் , துர்க்கை அம்மன் கோவிலின் தோற்றம்
கோயிலின் உள்ளே சென்றோம். தஞ்சை கோவிலை போன்றே மிக பெரிய லிங்கம். என் நண்பன் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையில் நான் கோவிலின் மற்ற இடங்களை பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த கோவிலின் மற்றொரு அர்ச்சகர் அந்த கோவிலை பற்றி கூற தொடங்கினார்.
இராஜராஜனை விட இராஜேந்திரன் மிக பெரிய போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றாலும் அவன் தந்தையை மிகவும் விரும்பியதற்கு, மதித்ததற்க்கு இக்கோயில் ஒரு சான்றாகும். பல போர்களில் வென்றதை பறைசாற்ற தஞ்சை கிளை விட மிக பெரிய கிளை கட்ட பலர் வற்புறுத்தினாலும் தான் தந்தையை விட தான் உயர்ந்தவனல்ல என்பதை குறிக்கும் வகையில் தஞ்சை கோவிலை விட ஒரு அடி குறைவாகவே இக்கோவிலை கட்டினான் இராஜேந்திரன்.
கோவிலின் மற்றொரு புகைப்பட காட்சி
இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது. இதன் சிறப்பு வெளிப்புற தட்ப வெப்ப நிலைக்கேற்ப மாறி கொள்ளும். வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாகவும், வெளியே குளிர்ச்சியாக இருக்கும் போது கர்ப்பகிரகம் வெது வெதுப்பாகவும் இருக்கும்.
கோவிலின் முற்புறம் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. சிறிய நந்தி இராஜேந்திரன் அமைத்தது என்றும் அதன் பின்புறம் உள்ள பெரிய நந்தி பிற்காலத்தில் வேறு யாரோ அமைத்தது என்றும் கேள்விப்பட்டோம். இராஜேந்திரன் அமைத்த நந்தியை குறித்த மற்றொரு சுவாரஸ்யமான செய்தி அந்த நந்தியின் காதில் உங்கள் விருபத்தை கூறினால் அந்த விருப்பம் நிறைவேறும் என்பது. என் நண்பனும் தான் விருப்பத்தை நந்தியின் காதில் கூறிவிட்டு வந்தான். (மறுநாள் நாங்கள் பூம்புகார் சென்று கொண்டு இருந்தபோது அந்த விருப்பம் நிறைவேறியதாக அவன் சொன்னது தனி கதை).
இரு நந்திகள்
கோவிலின் மற்றொருபுறம் அமைந்துள்ளது துர்கைக்கு என தனி கோவில். நிசும்பசூதனி என்ற துர்க்கையே சோழர்களின் குலதெய்வம். இராஜராஜனும், இராஜேந்திரனும் போருக்கு செல்லும் போதும் , போரை வென்று வந்த போதும் இத்துர்கையை வழிபட்டு வந்தனர்.
கோவிலின் கோபுர கலசம்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலை நீங்களும் ஒரு முறை சென்று பாருங்கள். இக்கோவில் உங்கள் மனதையும் கொள்ளை கொள்ளும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
Monday, August 30, 2010
Thursday, August 19, 2010
போக்குவரத்து நெரிசலும் தனி மனித ஒழுக்கமும்
வேலைக்கு செல்வதற்காக தினமும் நான் செய்வது 20 நிமிடத்திலிருந்து 1 மணி நேர பயணம். பயணம் செய்யும் வாகனத்தை பொறுத்து நேரமும் மாறும். ஆனால் மாறாத ஒரு விஷயம் சென்னை traffic. அதுவும் இந்த கோடை காலத்தில் பேருந்து பயணம் என்பது இந்த நகரத்தில் நரக வேதனை. பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் சொர்க்கம் என்பது ஜன்னலோர இருக்கையும் கிடக்கும் நேரத்தில் ஒரு சுகமான தூக்கமும்.
என்னை பொறுத்தவரை எனக்கு பேருந்து பயணத்தில் சுகம் என்பது ஓட்டுனர் இருக்கைக்கு எதிர்புறம் முதல் seat இல் அமர்வது. அதற்காகவே வேளச்சேரி பேருந்து நிலையத்தில் காத்திருந்து பஸ் ஏறுவேன். வேளச்சேரியில் இருந்து DMS செல்வதற்குள் சாலையில் நான் பார்க்கும் நாடகங்கள் பல பல. அதிலும் ஒவ்வொரு நாளும் சென்னை traffic சொல்லி முடியாது.
ஆனால் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கிய காரணம் போக்குவரத்து விதி மீறலே. சாலை விதிகளை மதிக்காமல் செல்லவதை ஒரு சாகசம் போல் கருதும் ஒரு சாரார். சாலை விதிகளை மதித்து signal இல் நிற்பவன் கேட்க வேண்டிய கெட்ட வார்த்தைகள் பல பல. விதிகளை மதித்து நடப்பவன் பலரது ஏளன பார்வைக்கு உள்ளாவான் என்பதே இன்றைக்கு உள்ள நிதர்சனமான உண்மை.
இந்த விதி முறை மீறல்கள் செய்பவர்கள் யார் என்று பார்த்தல் யாரோ சட்டம் தெரியாத பாமரன் அல்ல. நன்கு படித்த முட்டாள்கள் தான். தங்கள் படித்து விட்டதாலேயே தங்களுக்கு எல்லாம் தெரிந்ததாகவும் தங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற மனோ பாவத்துடனும் அலையும் மாகானுபவர்கள் தான் இந்த சிங்கார சென்னையில் அதிகம். இதன் காரணமாகவே விபத்தும் போக்குவரத்து நெரிசலும் அதிகம்.
ஆட்டோவா அல்லது எமன் வாகனமா என்று நினைக்க தூண்டும் வகையில் அதை ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்கள். இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் என்று சொல்வார்கள். அது நூறு சதவீதம் இவர்களுக்கு பொருந்தும். சவாரி இருந்தால் சாலையில் பறப்பதும் இல்லாவிடில் சாலையில் நினைத்த இடத்தில் நிற்பதும் ஊர்வதுமாக அவர்கள் ஏற்படுத்தும் நெரிசலும் சொல்லி முடியாது.
சாலையை கடக்க தனி இடமும் subway யும் இருந்தாலும் எந்த விதிமுறையும் இல்லாமல் சாலையை குறுக்கே கடந்து விபத்தை ஏற்படுத்தும் மக்கள் ஒரு காரணம்.
ஆனால் இது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. போக்குவரத்து விதி முறை மீறுவோரை க(த)ண்டிக்க வேண்டிய போக்குவரத்து காவலர் அதை செய்யாமல் ஒரு இளித்தவாயனை பிடித்து கையூட்டு பெறுவதிலேயே குறியாக இருப்பதும் ஒரு காரணம். அரசாங்கமும் ஒரு காரணம். குண்டும் குழியுமான சாலைகள். அதை சரிவர செப்பனிட முடியாத அல்லது விரும்பாத அரசாங்கம். அப்படியே மராமத்து வேலை செய்தாலும் நாலு நாளில் பூச்சிழந்து பல்லிளிக்கும் சாலைகள்.
இந்த கட்டுரையின் ஒரு நோக்கமே இதை படிக்கும் நூற்றில் ஒருவர் தன்னை திருத்தி கொண்டாலே போதும் என்பதே. முதலில் நாம் நம்மை சரிபடுத்துவோம். பிறகு அரசாங்கத்தையோ பிறரையோ சுட்டி காட்டுவோம். திருந்திய ஒரு தனி மனிதனால் ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும் .

Subscribe to:
Posts (Atom)